கொரோனா அச்சத்தால் வெறிச்சோடிக் காணப்படும் பாடசாலைகள் - News View

About Us

About Us

Breaking

Monday, March 9, 2020

கொரோனா அச்சத்தால் வெறிச்சோடிக் காணப்படும் பாடசாலைகள்

(எச்.எம்.எம்.பர்ஸான்)

மட்டக்களப்பு, ஜெயந்தியாயவில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு சிகிச்சைப் பிரிவு இன்று ஆரம்பிக்கப்படவுள்ள தகவல்களை தொடர்ந்து குறித்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் அச்சத்தின் காரணமாக சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயம், ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயம் மற்றும் புணானை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றில் அச்சம் காரணமாக மாணவர்கள் வரவின்றி பாடசாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

குறித்த பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்று தொடர்பான சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்காத போதும் ஆசிரியர்கள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment