தென்கிழக்கு ஆசியாவிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 18, 2020

தென்கிழக்கு ஆசியாவிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருவதால் உலக சுகாதார ஸ்தாபனம் அவ்வலயத்திற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

“நிலைமை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. அதிகமானவர்களுக்கு வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும்” என உலக சுகாதார ஸ்தாபனத்தின் வலயப் பணிப்பாளர் வைத்தியர் பூனம் கேத்ரபால் சிங் (Dr Poonam Khetrapal Singh) தெரிவித்துள்ளார்.

“வைரஸ் பரவிய மேலும் சிலர் தொடர்பான தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், மிகவும் பாதுகாப்பானதும் பயனுள்ளதுமான சோதனைக்கான முன்னெச்சரிக்கை இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மிக வேகமானதும் சமூகத்தின் முழுமையான முயற்சியுடன் இதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவிலுள்ள 11 நாடுகளில் 08 நாடுகள் இந்நோய் பரவியுள்ளமை உறுதிப்படுத்தியுள்ளதோடு, அதில் கூடியளவான நோயாளர்கள் தாய்லாந்தில் பதிவாகியுள்ளனர்.

இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகியன இந்நோய்த் தொற்றுக்கு உள்ளாகிய ஏனைய நாடுகளாகும்.

No comments:

Post a Comment