'தம்பதிவ' யாத்திரை என அழைக்கப்படும் புத்தகயா செல்லும் புனித யாத்திரைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்த சாசன அமைச்சினால் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கௌதம புத்தரின் பிறந்த இடமான இந்தியாவிலுள்ள லும்பினி மற்றும் புத்தர் பரிநிர்வாணமடைந்த புத்தகயா உள்ளிட்ட பிரதேசங்களைத் தரிசிக்கும் இந்த யாத்திரை இடம்பெறும் காலமாக இக்காலப் பகுதி அமைந்துள்ளது.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளும் நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தம்பதிவ யாத்திரைக்கு தற்காலிகமாக தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பந்துல ஹரிஷ்சந்திர தெரிவித்தார்.
இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் புத்தகயா அமைந்துள்ளது.
No comments:
Post a Comment