சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின், பிரதான கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று (09) காலை, இலக்கம் 815, E.W. பெரேரா மாவத்தை, அதுல்கோட்டை எனும் முகவரியில் இவ்வலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்த அருகில் திறந்து வைக்கப்பட்ட இவ்வலுவலகம், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் தமையின் கீழ் இன்று காலை திறக்கப்பட்டது.
இவ்வைபவத்தில், கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அக்கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment