இத்தாலியில் 60,000 இலங்கையர் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, March 9, 2020

இத்தாலியில் 60,000 இலங்கையர் பாதிப்பு

இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியம் மற்றும் 14 மாகாணங்கள் தனிமைப்படுத்தப்பட்டமை காரணமாக அங்கு வசிக்கும் சுமார் 60,000 இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

104,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இத்தாலியில் வசித்து வருகின்றனர். அவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் லோம்பார்டி பிராந்தியத்தில் உள்ளனர்.

இத்தாலியின் இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கை காரணமாக சுமார் 60,000 இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தீர்மானம் காரணமாக 16 மில்லியன் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தலானது ஏப்ரல் மாதம் ஆரம்பப் பகுதி வரை நீடிக்கும் என்று அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார். 

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 230 ஐ கடந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5,883 ஆக பதிவாகியுள்ளது. 

இதன் காரணமாகவே இத்தாலிய அரசாங்கம் 16 மில்லியன் மக்களை தனிமைப்படுத்தும் தீர்மானத்தை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment