கல்வி கற்று முடிந்த பின்னர் அனைவரும் தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் மாற வேண்டும் - சிப்தொர புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதேச செயலாளர் முசம்மில் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 12, 2020

கல்வி கற்று முடிந்த பின்னர் அனைவரும் தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் மாற வேண்டும் - சிப்தொர புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதேச செயலாளர் முசம்மில்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

கல்வி கற்று முடிந்த பின்னர் அனைவரும் தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் மாற வேண்டும். அதற்கான தகுதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தெரிவித்தார்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் சமுர்த்தி பயனாளிக் குடும்ப பிள்ளைகளுக்கு சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.

இதனடிப்படையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களில் வாழும் 2020ஆம், 2021ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி தலைமை முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், திட்ட முகாமையாளர் ஏ.எல்.எம்.சரீப், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களில் வாழும் சமுர்த்தி பயனாளிக் குடும்ப பிள்ளைகளின் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்படும் சிப்தொர புலமைப்பரிசில் 2020ஆம், 2021ஆம் ஆண்டுகளில் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள 135 மாணவர்களுக்கு மாதாந்தம் ஆயிரத்தி ஐநூறு ரூபாய் என்ற வகையில் வழங்கி வைக்கப்பட்டது.

எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment