அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கின்றனர் - அமைச்சர் பந்துல - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கின்றனர் - அமைச்சர் பந்துல

சர்வதேச ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை நாட்டில் தடுப்பதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை திட்டமிட்ட வகையில் முன்னெடுத்து வருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகிகோரின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆனால் சிலர் அரசியல் ரீதியில் இதனை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் பின்நிற்காது என்று அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கேட்போர் கூடத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (COVID-19) செய்தியாளர் சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, அரச நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி, அரசாங்க தகவல் திணக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ உள்ளிட்ட பலர் இதில் கலந்துக் கொண்டனர்.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த சீனப் பெண் இலங்கையில் சிகிச்சைகளை பெற்று குணமடைந்து நாடு திரும்பியமை அரசாங்கத்தின் வேலைத்திட்டம் எவ்வளவு முன்னேற்றகரமானது என்பதற்கு எடுத்துக்காட்டாகும் என்றும் அமைச்சர் பந்துல குணவரத்தன சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad