மருந்துகள் உட்பட அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு விசியோகிக்க தபால் ஊழியர்களின் உதவியை பெற கவனம் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 26, 2020

மருந்துகள் உட்பட அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு விசியோகிக்க தபால் ஊழியர்களின் உதவியை பெற கவனம்

மருந்துகள் உட்பட அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு வினியோகிக்க தபால் ஊழியாகளின் உதவியை பெற்றுக் கொள்ள முடியுமா என்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஆராயுமாறு தபால்மா அதிபருக்கு தாம் ஆலோசனை வழங்கியிருப்பதாக உயர் கல்வி, தொழில் நுட்பம் புத்தாக்க மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் தற்போது தபால் ஊழிகள் தபால் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. இவர்கள் அந்தந்த பகுதகளைச் சேர்ந்த மக்ளை நன்கு அறிவர் இதனால் இந்த வநியோகப் பணிகளை சிறப்பாக இவர்களால் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், அத்தியாவசிய விநியோக நடவடிக்கைகளுக்காக தமது அமைச்சுக்கு உட்பட்ட தபால் திணைக்களத்தின் வாகனங்களை வழங்குமாறு பிராந்திய தபால் அலுவலங்களுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் கூறினார்.

சர்வகட்சி கூட்டத்தில் அரசாங்கம் முன்வைத்த வேலைத்திட்டங்களை எதிர்க்கட்சியினர் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அரசியல் பாகுபாடு இல்லாது அனைவரும் இதனை ஏற்றுக்கொண்டனர் என்றார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad