இரு குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்த தந்தை! - News View

About Us

About Us

Breaking

Monday, March 9, 2020

இரு குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்த தந்தை!

தந்தையொருவர் தனது, 3 வயதான பெண் குழந்தையையும் 6 வயதான ஆண் குழந்தையையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொக்கரல்ல, வெவ்சிறிகம பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய, பொலிஸார் விசாரணைகள ஆரம்பித்துள்ளனர்.

32 வயதான குறித்த சந்தேகநபர் தனது வீட்டின் கட்டிலில் தனது குழந்தைகள் இரண்டையும் இவ்வாறு கொலை செய்துள்ளதோடு, அவரது சடலம் தூக்கிலிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற வேளையில் சந்தேகநபரின் மனைவி வீட்டில் இருக்கவில்லை எனவும், அவர் கட்டுநாயக்கவிலுள்ள வீடொன்றில் பணி புரிந்து வருகின்றமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்வபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும், பொருளாதார கஷ்டம் காரணமாக ஏற்பட்ட கவலை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதோடு, இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment