பன்னிபிட்டிய, அரலிய உயன பொது மைதானத்தில், அனுமதியின்றி ஒலி பெருக்கி பயன்படுத்தப்பட்டு இடம்பெறும் நிகழ்வு தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய மேற்கொண்ட சுற்றி வளைப்பில் 77 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்றையதினம் (08) இடம்பெற்ற குறித்த ஒன்றுகூடல், பேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்பட்டமை தெரிய வந்துள்ளது.
இதன்போது, 19 தொடக்கம் 35 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் 60 ஆண்களும் 17 பெண்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர்கள், கொழும்பு, கொணகல, அக்குரணை, வத்தளை, பன்னிபிட்டிய, கடுவலை, பத்தரமுல்லை, மீகொடை, ஹோமாகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்றையதினம் (09) கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment