மரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலை நிர்ணயம் - இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, March 27, 2020

மரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலை நிர்ணயம் - இருவர் கைது

நேற்று (26) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், மரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், மரக்கறி மொத்த விற்பனை நிலையத்திற்கு வௌியே விற்பனை செய்யப்படும் போது, சில்லறை விலையாக ஒரு கிலோகிராமிற்கு 40 ரூபா மாத்திரமே மேலதிகமாக அறவிடப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில்,

கேரட் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 150 ரூபா

லீக்ஸ் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 120 ரூபா

போஞ்சி 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 120 ரூபா

கோவா 1 கிலோகிராமின் உச்சப்பட்ச மொத்த விலை 100 ரூபா

பீட்ரூட் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 80 ரூபா

கறிமிளகாய் 1 கிலோகிராமின் உச்சப்பட்ச மொத்த விலை 150 ரூபா

தக்காளி 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 100 ரூபா

வெண்டைக்காய் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 70 ரூபா

வாழைக்காய் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 70 ரூபா

கத்தரிக்காய் 1 கிலோகிராமின் மொத்த விற்பனை விலை 100 ரூபா

தேசிக்காய் மற்றும் இஞ்சியின் அதிகபட்ச மொத்த விலை 150 ரூபா

காய்ந்த மிளகாய் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 200 ரூபா

என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புறக்கோட்டை மெனிங் சந்தையில் மரக்கறிகளை அதிக விலையில் விற்பனை செய்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment