கொரோனா பீதிக்கு இடையில் ஆப்கானிஸ்தான் சென்றார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Monday, March 23, 2020

கொரோனா பீதிக்கு இடையில் ஆப்கானிஸ்தான் சென்றார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து பல தலைவர்கள் பிற நாடுகளுக்கு செல்வதை தவிர்க்கும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அவசரப் பயணமாக இன்று ஆப்கானிஸ்தான் வந்தார்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜனாதிபதியாக சமீபத்தில் அஷ்ரப் கானி மீண்டும் பதவியேற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்ற அப்துல்லா அப்துல்லாவும் அதேநாளில் தன்னை அந்நாட்டின் ஜனாதிபதியாக அறிவித்துள்ளார்.

தற்போது அங்கு இரட்டை அதிகார ஆட்சிமுறை அமுலில் இருப்பதுபோல் தோன்றினாலும் உலக நாடுகளில் பெரும்பாலானவை அஷ்ரப் கானி தலைமையைத்தான் அங்கீகரித்துள்ளன.

இந்த அதிகாரப் போட்டிக்கு இடையில் அமெரிக்காவின் ஏற்பாட்டின்பேரில் ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் கடந்த மாதம் ஏற்படுத்திய சமாதான உடன்படிக்கை பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை.

அரசுப் படைகளும் தலிபான் பயங்கரவாதிகளும் இந்த உடன்படிக்கைக்கு மதிப்பளிக்காமல் வழக்கம்போல் இரு தரப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சமாதான உடன்படிக்கைக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தும் நோக்கத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ அவசரப் பயணமாக இன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் வந்தடைந்தார்.

No comments:

Post a Comment