மூடப்பட்டது ஏ 9 வீதி! - News View

About Us

About Us

Breaking

Monday, March 23, 2020

மூடப்பட்டது ஏ 9 வீதி!

யாழ்ப்பாணத்தில் கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இனங்காணப்பட்ட நிலையில் வட மாகாணத்திற்கான ஊரடங்கு காலம் நாளை (செவ்வாய் கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியாவில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் திரிவோரை தவிர ஏனையவர்கள் பொலிஸாரால் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அத்துடன், நேற்று மாலை 6 மணிக்கு பின்னர் ஓமந்தை, மற்றும் கனகராயன்குளம் பகுதியில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஏ 9 வீதி மூடப்பட்டுள்ளது.

பொலிஸாரின் தற்காலிக அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்கள் மாத்திரம் குறித்த வீதியால் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதுடன் சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment