உமா ஓயா திட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கிய முறை தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 5, 2020

உமா ஓயா திட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கிய முறை தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

உமா ஓயா திட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கிய முறை தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, விவசாயிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரங்கநாத் தாபரே முன்வைத்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, மன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

விவசாய திணைக்களத்தினால் மதிப்பிடப்பட்ட நட்டஈட்டு தொகை, அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு குறைந்தளவான நட்டஈடே வழங்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி தாபரே கூறியுள்ளார்.

இந்த வழக்கை எதிர்வரும் ஜூலை 20 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு, பிரியந்த ஜயவர்தன, பி. பத்மன் சூரசேன மற்றும் யசந்த கோதாகொட ஆகிய நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment