கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனிய பாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளார்.
சந்தேகநபர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய M.H.M.ஹம்ஸா இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
2006 இற்கும் 2009 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், அம்பாறை - திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று - ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 6 பேரை கடத்தி காணாமலாக்கியமை தொடர்பில் இனிய பாரதிக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
காணாமலாக்கப்பட்ட 6 பேர் தொடர்பில், பாதுகாப்பு அமைச்சு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகங்களில் செய்த முறைப்பாட்டிற்கு அமையை சந்தேகநபர் மீது 6 வழக்குகள் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment