ராஜித்த சேனாரத்ன தொடர்பிலான பிணை வழங்கிய வழக்கு ஒத்தி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 5, 2020

ராஜித்த சேனாரத்ன தொடர்பிலான பிணை வழங்கிய வழக்கு ஒத்தி வைப்பு

வௌ்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மூன்றாவது சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு பிணை வழங்கி கொழும்பு பிரதம நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மீள் பரிசீலனை விண்ணப்பம் தொடர்பான விசாரணை எதிர்வரும் 10ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

விண்ணப்பம் மீதான விசாரணை இன்று (05) நடைபெறவிருந்த போதிலும், சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுகயீனமுற்றிருப்பதால், இந்த விசாரணையை ஒத்திவைப்பதற்கு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment