எரிபொருளை பதுக்க முயற்சிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படுமென மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று அறிவித்துள்ளார்.
எரிபொருளுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயற்படுவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதையடுத்தே அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
இலங்கையர்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதையடுத்து எரிபொரு தட்டுப்பாடு ஏற்படுமென சிலர் கிளப்பிவிட்ட வதந்திகள் காரணமாக மக்கள் அச்சத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக இன்று தமது வாகனங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது, மக்கள் அநாவசியமாக அச்சப்பட வேண்டாமென்றும் நாட்டின் பாவனைக்கு தேவையானளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
எவ்வாறாயினும் எரிபொருளை பதுக்க முயற்சிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படுவது உறுதியென்றும் அவர் குறிப்பிட்டார்.
லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment