கொரோனா வைரசின் காரணமாக சீனாவில் இருந்து மூலப்பொருட்கள் பெறுவதில் அல்லது வர்த்தக நடவடிக்கைகள் பெறுவதில் பிரச்சினைகளை எதிர்நோக்கும் வர்த்தகர்களுக்கு உடனடி தீர்வைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதி செயலம் இவற்றுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க தயார் நிலையில் இருப்பதாக அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர்களுடனான சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் இருந்து மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிப் பொருள் தயாரிப்பிற்கு பெரும்பாலான மூலப்பொருட்கள் சீனாவில் இருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
தற்பொழுது இடம்பெற்றுவரும் கொரோனாவின் தாக்கம் காரணமாக எமது தொழில் துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஜனாதிபதி இந்த எற்பாட்டை மேற்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு யாப்பு ரீதியாக உள்ள அதிகாத்துக்கு அமைவாக எதிர்வரும் 3 மாத காலத்துக்கு நாட்டின் செலவிற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதியினால் முடிந்துள்ளது. இதனால் சிலர் நிதி தொடர்பில் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
சீன வங்கியிடம் இருந்து கடனைப் பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது. 1000 மில்லின் ரூபாவும், 2000 மில்லியன் ரூபாவும் இந்த வங்கிகளிடம் இருந்து கடனாகப் பெறப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் இதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.
No comments:
Post a Comment