எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான அரசாங்க செலவுகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம் திறைசேரியின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மார்ச் மாதம் 06 ஆம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் திறைசேரியின் செயலாளருக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தேர்தல் நடவடிக்கைகளுக்கான செலவுகள், அமைச்சுகளுக்கு அரசாங்கத்தினால் செலுத்தப்பட வேண்டியுள்ள நிலுவைகள் மற்றும் ஏனைய செலவுகளை திறைசேரி செயலாளரினால் மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment