பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்பு திட்டமிட்ட வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமைவாக வழங்கப்படும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று உயர் கல்வி தகவல் தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவவும் இதில் கலந்து கொண்டார்.
இந்த நியமனம் வழங்குவது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுவரும் உண்மைக்கு புறம்பான கூற்றுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். 45,555 பேருக்கான நியமனங்கள் தொடர்பிலான விபரங்கள் அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளன.
இதில் தமது பெயர் இடம்பெறாத பட்டதாரிகள் அது தொடர்பான மேன்முறையீட்டை மேற்கொள்ள முடியும். இந்த மேன்முறையீட்டு கடிதங்களை இந்த நியமனங்களை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கான பணிகள் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
பொது தேர்தல் முடிந்த ஒரு வார காலத்திற்கு பின்னர் இவர்களுக்கு பயிலுனர்களுக்கான கொடுப்பனவு 20,000 ரூபா வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களம்
No comments:
Post a Comment