வதந்தியை நம்ப வேண்டாம் ! நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை ! - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

வதந்தியை நம்ப வேண்டாம் ! நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை !

(ஆர்.யசி) 

நாட்டில் ஏரிபொருள் தட்டுப்பாடு நிலவவில்லை எனவும் மிகத் தாராளமாக எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதன் காரணத்தினால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. 

நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக நிரம்பி வழிவதன் காரணத்தையும் மக்கள் மத்தியில் அனாவசிய அச்சம் ஏற்பட்டுள்ள காரணியையும் கருத்தில் கொண்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரின் கையொப்பத்துடன் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டது. 

இதில் குறிப்பிடப்பட்டுள்ளதானது, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஒன்று நிலவவில்லை. போதுமான அளவு எரிபொருள் சகல பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. 

எதிர்வரும் காலத்தில் தட்டுப்பாடு நிலவாத வகையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள காரணத்தினால் மக்கள் அனாவசிய அச்சம் கொள்ளத் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. 

புரளிகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அவதானம் செலுத்தி எவரேனும் பொய்யான செய்திகளை பரப்பி மக்களை குழப்பமடைய செய்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் தீர்மானம் எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment