எனக்கு கொரோனா தொற்றில்லை - அமைச்சர் தினேஸ் குணவர்தன - News View

Breaking

Post Top Ad

Sunday, March 15, 2020

எனக்கு கொரோனா தொற்றில்லை - அமைச்சர் தினேஸ் குணவர்தன

கொரோனா வைரஸ் தொற்றுக்கு நான் உள்ளாகவில்லை. சிறந்த சுகாதாரத்துடனே உள்ளேன். அனைத்து அரச செயற்பாடுகளையும் பூரணமாக முன்னெடுத்து வருகின்றேன் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவில் பதிவேற்றம் செய்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதால் வெளிவிவகார அமைச்சர் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 

இவ்வாறான செய்தியில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாது. பூரண சுகாதாரத்துடனே நாள் உள்ளேன். இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றவில்லை. அரச செயற்பாடுகளில் முழு ஒத்துழைப்புடன் ஈடுபட்டு வருகின்றறேன் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad