(இராஜதுரை ஹஷான்)
பூகோள ரீதியில் எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படவுள்ள நிலையில் இந்த சவாலை எதிர்கொள்ள துரிதமாக விவசாயத்துறை அபிவிருத்தி செய்யப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையில் மக்கள் முடிந்தளவிற்கு வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கையில் ஈடுப்பட வேண்டும்.
தற்போதைய உலக நடப்பின் பிரகாரம் எதிர்காலத்தில் பூகோள மட்டத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த சவாலை வெற்றி கொள்ள வேண்டும்.
விவசாயத்துறை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அனைத்து மட்டத்திலும் முன்னெடுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது வீட்டில் இருக்கும் மக்கள் முடியுமான அளவிற்கு வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டும்.
தற்போது விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளுக்கு விவசாய சேவை மத்திய நிலையத்தின் ஊடாக கிருமிநாசினிகள், உரமானியங்கள் வழங்கப்படும். அத்துடன் பிரதேச விவசாய அதிகாரிகள் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
நாடு தழுவிய ரீதியாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது இலங்கை வாழ் அனைத்து பிரஜைகளினதும் பொறுப்பாகும்.
No comments:
Post a Comment