கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக எத்தியோப்பிய ஜனாதிபதி சாஹ்ல்-வொர்க் ஜெவ்டே தனது, நாட்டில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
இது குறித்து டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள சாஹ்ல்-வொர்க் ஜுவ்டே, இத்தீர்மானத்தின் மூலம் சிறைச்சாலைகளில் உள்ள சன நெருக்கடியை குறைக்க முடியும் என்று கூறியுள்ளார்.
சிறு குற்றங்களுக்காக அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட கைதிகளுக்கே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான 12 பேர் எத்தியோப்பியாவில் அடையளாம் காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் புதன்கிழமை அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment