பிரிட்டிஸ் பிரதமருக்கு கொரோனா வைரஸ் - மருத்துவ பரிசோதனையில் உறுதி - News View

About Us

About Us

Breaking

Friday, March 27, 2020

பிரிட்டிஸ் பிரதமருக்கு கொரோனா வைரஸ் - மருத்துவ பரிசோதனையில் உறுதி

பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார். டவுனிங் ஸ்ரீட் பேச்சாளர் ஒருவர் இதனை உறுதி செய்துள்ளார். 

நேற்று சிறிய அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரியின் ஆலோசனையின் அடிப்படையில் பிரதமர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என பிரதமர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்தின் சுகாதார சேவையை சேர்ந்தவர்கள் பிரதமரின் அலுவலகத்தில் அவரை பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள் இதன்போது பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது என பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

வழிகாட்டுதல்களிற்கு அமைய பிரதமர் தன்னை சுயதனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தியுள்ளார் என பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

எனினும் அவர் அரசாங்கத்தின் வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளிற்கு தலைமை தாங்குகின்றார் என பேச்சாளர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment