தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 17, 2020

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூலமான வாக்கு விண்ணப்பங்களைக் கையேற்கும் கடைசித் திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூலமான வாக்கு விண்ணப்பங்களைக் கையேற்கும் திகதி 2020.03.17 இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையுமென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இருப்பினும், மார்ச் 17, 18, 19 ஆகிய தினங்கள் அரசாங்க விசேட விடுமுறை தினங்களாக தற்போது பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் கிடைக்கின்ற தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை இன்றைய தினம் அதாவது 17 ஆம் திகதி கிடைத்த விண்ணப்பங்களாகக் கருதிச் செயலாற்றுவதற்கு எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் அடிப்படையிலேயே தபால் மூலமான வாக்கு விண்ணப்பங்களைக் கையேற்கும் கடைசித் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என மஹிந்த தேசப்பிரிய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad