நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடளாவிய ரீதியில் போடப்பட்ட ஊடரங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில் மக்கள் அச்சத்திற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கல்குடாப் பிரதேசத்தில் இன்று (23) பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
அத்தோடு பொதுமக்கள் மிகுந்த பயத்துடன் வியாபார நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வருவதுடன், பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவாக காணப்படுகின்றது. பெரும்பாலான பகுதிகளில் வாழும் மக்களின் அச்ச நிலைமை இன்னும் குறையாத வண்ணம் காணப்படுகின்றது.
வியாபார நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வரும் மக்களின் வீதம் குறைவாகவே கடந்த சில நாட்களாக காணப்பட்டதுடன், ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு நீக்கப்பட்ட நிலையில் மக்களின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது.
இதன் காரணமாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மக்களின் நெரிசலினை குறைத்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கடமைகளில் ஈடுபட்டு வருவதைக் காணக் கூடியதாக உள்ளதுடன், பேருந்து போக்குவரத்துக்கள் இடம்பெற்று வருகின்றது.
No comments:
Post a Comment