பொகவந்தலாவ பகுதியில் எவருக்கும் கொரோனோ தொற்று நோய் இல்லை எனவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாமென பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையை கருத்தில் கொண்டு வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் சென்று நாடு திரும்பியவர்கள் குறித்து தாம் கண்காணித்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 43 நபர்கள் மீது பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த கண்காணிப்பு நடவடிக்கையின் போது 14 பேருக்கு மருத்துவ சான்றிதழ்கள வழங்கியுள்ளதாகவும் மேலதிகமாக உள்ள 29 பேர் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டனர்.
இதேவேளை, பொய்யான வதந்திகளை பரப்பி வருவோருக்கு எதிராக பொலிஸாரின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப் படுமெனவும் தெரிவித்தனர்.
இதேவேளை, மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள மக்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து தொழிலுக்கு செல்லாமல் அரசாங்கத்தினால் அமுல்படுத்தபட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை முறையாக மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.
மலையக நிருபர் சதீஸ்குமார்
No comments:
Post a Comment