அநுராதபுர சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவும் : சிறை பொறுப்பதிகாரியிடம் செல்வம் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 22, 2020

அநுராதபுர சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவும் : சிறை பொறுப்பதிகாரியிடம் செல்வம் வேண்டுகோள்

(ஆர்.ராம்) 

அநுராதபுர சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக அவர்களை பிறிதொரு சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ரெலோ அமைப்பின் தலைவர் செவ்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினை அடுத்தே இவ்வாறான கோரிக்கையை தான் அநுராதபுரச் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரியை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறைக் கைதிகள் போராட்டத்தினை முன்னெடுக்க முயன்றதாக கூறப்பட்டு பின்னர் சிறை உடைப்பில் ஈடுபட்டமையால் எழுந்த பதற்றத்தால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு உயிரிழப்புக்களும் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில் சிறைச்சாலையின் உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பில் கேட்றிந்து கொண்டேன். அத்துடன் அவர்களை அண்மைய நாட்களில் ஏனைய கைதிகளுடன் இணைத்துள்ளமையை அறிந்தமை தொடர்பில் குறிப்பிட்டதோடு அவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் கோரிக்கை விடுத்திருந்தேன்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அந்த அதிகாரி என்னிடத்தில் உறுதியாக தெரிவித்தபோதும், தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தினை அவரிடத்தில் வலியுறுத்தி அவர்களை உடனடியாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளேன்.

அதுமட்டுமன்றி கொரோனா தொற்றின் ஆபத்தினை உணர்ந்து அரசாங்கம் தற்காலிமாக அவர்களை விடுதலை செய்வதற்குரிய நடவக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற பகிரங்க கோரிக்கையையும் இச்சந்தர்ப்பத்தில் முன்வைக்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment