சியன ஊடக வட்டத்தின் முயற்சியில் கஹட்டோவிட்ட பிரதேசத்தில் வாசிகசாலை திறந்து வைக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Friday, March 6, 2020

சியன ஊடக வட்டத்தின் முயற்சியில் கஹட்டோவிட்ட பிரதேசத்தில் வாசிகசாலை திறந்து வைக்கப்பட்டது



(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)

சியன ஊடக வட்டத்தின் முயற்சியில் வாசிகசாலையொன்று கஹட்டோவிட்ட பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது. 

சியன ஊடக வட்டத்தின் தலைவரும் முன்னாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் பணிப்பாளருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் அவர்களினால் இன்றைய தினம் (06) திறந்து வைக்கப்பட்டது. 

திறப்பு நிகழ்வின் பிரதம அதிதியாக அல் ஹிமா - சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.நூருல்லாஹ் (நளீமி) அவர்கள் கலந்து சிறப்பித்தார். 

சிறப்பு அதிதிகளாக கஹட்டோவிட்ட ஜம்இய்யதுல் உலமா கிளையின் தலைவர் மௌலவி அப்துஸ்ஸலாம் (பலாஹி), கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலய அதிபர் சர்ஜூன் சேர், ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஸிக் மாஸ்டர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ருஸ்தி ஹாஜியார், பிரதேச சமூக சேவகர் பிர்தவ்ஸ் ஹாஜியார், முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் நிர்வாகக்குழு உறுப்பினர் கியாஸ், சியன ஊடக வட்டத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment