சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏ.ஜே.எம். முஸம்மில் பௌன்டேஷனின் கீழ் இயங்கும் "காந்தா சவிய" பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள "சர்வதேச மகளிர் தின நிகழ்வு" எதிர்வரும் 7ஆம் திகதி சனிக்கிழமை குருநாகல் நகர சபை மண்டபத்தில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
"காந்தா சவிய" பெண்கள் அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
வருடா வருடம் "காந்தா சவிய" பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்றுவந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வு, ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்கள் வடமேல் மாகாண ஆளுநராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக குருநாகல் நகரில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment