அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதும், அனைத்து பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் கீழுள்ள வர்த்தக நிலையங்களையும் திறக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்/பதிவாளர் சுவிந்த எஸ். சிங்கப்புலி இவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.
நுகர்வோருக்குத் தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கையாக இதனை மேற்கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கூட்டுறவு வர்த்தக நிலையங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுமாயின், தங்களது பிரதேச கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மூலம், வரையறுக்கப்பட்ட இலங்கை கூட்டுறவு விற்பனை சங்கம் (Mark Fed) உடன் தொடர்புகொண்டு, பொருட்களை தொகையாக பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
வரையறுக்கப்பட்ட இலங்கை கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழுள்ள கூட்டுறவு சங்கங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதியளவில் கையிருப்பில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment