தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தடை : சுகாதார அமைச்சு - News View

About Us

About Us

Breaking

Saturday, March 14, 2020

தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தடை : சுகாதார அமைச்சு

(எம்.மனோசித்ரா) 

கொரோனா வைரஸ் தொடர்பில் பரிசோதிப்பதற்கு அல்லது வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக இணங்காணப்பட்டுள்ளோர் சிகிச்சை பெற்றுக் கொள்வோர் அரச வைத்தியசாலைகளுக்கு மாத்திரமே செல்ல வேண்டும் என்று சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவிக்கையில், அரச வைத்தியசாலைகளில் மாத்திரமே கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

தனியார் வைத்தியசாலைகளுக்கு இது தொடர்பில் அரசாங்கம் அறிவுறுத்தல் எவற்றையும் முன்னெடுக்கவில்லை. 

இது தொடர்பான பரிசோதனைகள் அரச மருத்துவ பரிசோதனை நிலையம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடம், கராப்பிட்டி மற்றும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலை உள்ளிட்டவற்றிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. 

எதிர்வரும் சில தினங்களில் வட கொழும்பு வைத்தியசாலையிலும் இந்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

No comments:

Post a Comment