கட்டுப்பாட்டை இழந்த வேன் மரத்துடன் மோதி கோரம் - ஆறு பேர் பலி, மூவர் படுகாயம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 9, 2020

கட்டுப்பாட்டை இழந்த வேன் மரத்துடன் மோதி கோரம் - ஆறு பேர் பலி, மூவர் படுகாயம்

லுனுகம்வெஹெர பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயங்களுக்கு உள்ளாகினர். 

மத்தளையிலிருந்து நேற்று அதிகாலை 1.45 மணியளவில் கதிர்காமம் நோக்கிச் சென்ற வேன், லுனுகம்வெஹெர 22 ஆம் மைல் கல்லருகேயுள்ள மரமொன்றுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வேன் சாரதியால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், பாதையை விட்டு வண்டி விலகி மரமொன்றுடன் மோதியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் லுனுகம்வெஹெர மற்றும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையிலேயே இவர்களில் ஆறு பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. காலியைச் சேர்ந்தவர்களே இதில் உயிரிழந்தனர். 

கதிர்காமம் நோக்கிச் செல்லும் வழியிலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளமை பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் இறந்தோரின் சடலங்கள் இனங்காணப்பட்டுள்ளன. எச்.கே. சுதேஷ் குமார 52 வயது, மலிந்து லியனகே ரஞ்சித் 28 வயது, எச்.வடுகே ரஞ்சித் 29 வயது, எ.எச். சமீர பிரசாத் 23 வயது, யசிரு தில்ஷான் 22 வயது மற்றும் சமீர சத்சர 22 வயது ஆகியோரே உயிரிழந்தனர். பசிது தில்ஷான் 24 வயது, ஸவிது சிந்தக மற்றும் யசித மதுஸங்க ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லக்ஷ்மி பரசுராமன், ஹம்பாந்தோட்டை நிருபர்

No comments:

Post a Comment