உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய ‘கொவிட்-19’ (கொரோனா வைரஸ்) இன் தாக்கமானது நாட்டில் ஏற்படக்கூடிய ஏதாவது சந்தர்பம் நிலவுகின்றதா என்பதனதை கண்டறிய மறுடியும் முப்படையினர் சுகாதார அமைச்சு மற்றும் உள்நாட்டு மருத்துவ சேவை மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து வெளிநாட்டு வதிவிட இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வந்ந பின்னர் அவர்களுக்கான மருத்துவ பரிசோதனையினை மேற்காள்ளும் இறுதி ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
அவ்வாறு இலங்கை வரும் குறைந்தது 2000-2500 பேரை இரண்டு வார காலம் தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு, புனானியில் நிர்மாணிக்கப்பட்ட பெற்றி கம்பெஸ் என அழைக்கப்படும் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம், பொலன்னறுவைவில் உள்ள கந்தகாடு மறுவாழ்வு மையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட நிலையங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஏதாவது அவசர நிலைமை ஏற்பட்டால் தியத்தலாவையில் 300 க்கும் அதிமானவர்களுக்கான தங்குமிட வசதிகள் வழங்க திட்டமிடப்பட்டுளன.
முப்படைகளின் தளபதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய செயற்படுத்தப்பட்டு வரும் அரசின் விரைவான முன் தடுப்பு திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சு பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ ஒத்துழைப்புடன் இவர்களுக்கான மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல ரசிக்க பெணான்டோ, அனைத்து நிறுவன உறுப்பினர்கள் இராணுவ வைத்தியசாலையின், தடுப்பு மருத்துவம் மற்றும் மனநல சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளரான வைத்தியர் கேணல் சவின் கமகே பொலன்நறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சிரேட முப்படை அதிகாரிகள் பொலிஸ் அதகாரிகள் உட்பட அனைவரும் குறித்த இரண்டு இடங்களின் தயார் நிலையினை மதிப்பீடு செய்வதற்காக நேற்று காலை (9) அங்கு சென்று பார்வையிட்டனர். அங்கு வருகை தந்த இராணுவத் தளபதி இத்திட்டத்தின் முப்படைகளின் தயார் நிலையினை அறிந்துகொண்டார்.
தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக புனானை மற்றும் கந்தகாடு ஆகிய நிலையங்களில் உள்ள தேவையினை பூர்த்தி செய்வதற்காக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் கடந்த 48 மணித்தியாலங்களாக செயற்பட்டு வருகின்றனர்.
தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக புனானை மற்றும் கந்தகாடு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட நிலையங்களில் ‘கொவிட்-19’ பாதிப்புக்குள்ளன நாடுகளில் இருந்து வரும் குறைந்தது 2000-2500 வரையான நபர்களை இரண்டு வார காலம் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்வதற்கான அனைத்து ஏறபடுகளும் செயயப்பட்டுள்ளன.
குறித்த மருத்துவ இடமானது 5-6 மருத்துவக் குழுவுடன் இரண்டு வார காலம் தனிமைப்படுத்தி மருத்துவ அடிப்படை வசதிகளுடன் வைத்திய உபகரணங்கள், WIFI தொடர்பாடல், வசதிகள், வெப்பமானிகள், வைத்திய ஒலி உபகரணங்கள் மற்றும் ஒவ்வொருவருக்குமான பாதுகாப்பு உபகரணங்கள் உட்பட வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிக்காட்டலின் இந்த நிலையங்களானது இயங்கி வருகின்றன. மேலும் ஈரான் இத்தாலி மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் வெளிநாட்டு வதிவட இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் இந்நிலையங்களில் பரிசோதனைக்குற்படுத்தப்படுவர்.
தேசிய தேவைப்பாட்டை கருத்திற் கொண்டு தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக புனானை மற்றும் கந்தகாடு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிலையங்கள் சுகாதார அமைச்சு மற்றும் உள்நாட்டு மருத்துவ சேவை பணிப்பாளர் நாயகம் நோய் தடுப்பு மருத்துவ 1897 இன் 3ஆம் இல சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வதிவட இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்காக இலங்கை இராணுவத்தினால் முன்னெடுககப்படும் இந்த மருத்துவ பரிசோதனை செயற்பாட்டிற்காக இராணுவமானது அனைத்து இலங்கையர்களையும் இந்த கொடிய நேய் பரவுவதை கட்டுபடுத்துவதற்காக தங்களளுடைய அளப்பெரிய ஒத்துழைபபினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றது.
இந்த பெரிய சுகாதார செயற்பாடானது கிழக்கில் இராணுவ வைத்தியசாலையின் சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்தியர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்கவின் ஆலோசணையின் கீழ் இராணுவ வைத்தியசாலையின் தடுப்பு மருத்துவம் மற்றும் மனநல சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளரான வைத்தியர் கேணல் சவின் கமகேவின் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment