சுய தனிமைப்படுத்தலிற்கான வேண்டுகோளை புறக்கணித்து பொன்டி கடற்கரையில் பெருமளவு மக்கள் கூடியதால் நியுசவுத்வேல்ஸ் அரசாங்கம் அந்த கடற்கரையை மூடியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் காலநிலை காரணமாக பெருமளவு மக்கள் பொன்டி கடற்கரையில் கூடியுள்ளனர். பொன்டி கடற்கரையில் பெருமளவு மக்கள் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. பலர் இதனை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நியுசவுத்வேல்சின் காவல்துறை அமைச்சர் உடனடியாக கடற்கரை பகுதியை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பெருமளவு மக்கள் சமூக தனிமைப்படுத்தலிற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள வேளையில் பொன்டி கடற்கரைக்கு மக்கள் செல்வது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
நியுசவுத்வேல்சின் ஏனைய கடற்கரை பகுதிகளும் மூடப்படலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்கள் விதிமுறைகள் உத்தரவுகளை பின்பற்றாவிட்டால் இதுவே நடைமுறையாகிவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோன வைரசினை முற்றாக அலட்சியம் செய்யும் விதத்தில் பலர் நடந்து கொண்டதை படங்கள் காண்பித்துள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதே கருத்தினை பொன்டி கடற்கரையை நிர்வாகம் செய்யும் வேவெர்லி சபையும் சமூக ஊடகங்களில் பலரும் வெளியிட்டுள்ளனர்.
வைரசினை கட்டுப்படுத்துவதில் நாங்கள் ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்ய வேண்டும், மக்கள் பொன்டி கடற்கரையில் காணப்பட்ட விதம் குறித்தும் சமூக தனிமைப்படுத்தலிற்கான அறிவுரைகளை பின்பற்றாதது குறித்தும் நான் ஏமாற்றமடைந்துள்ளேன் என வேவெர்லி சபையின் மேயர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment