நீதிமன்ற செயற்பாடுகள் மட்டுப்படுத்த தீர்மானம் - நீதிச் சேவை ஆணைக்குழு அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

நீதிமன்ற செயற்பாடுகள் மட்டுப்படுத்த தீர்மானம் - நீதிச் சேவை ஆணைக்குழு அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று முதல் இடம்பெறவிருந்த வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்படவுள்ளதோடு நீதிமன்றச் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

நீதிச் சேவை ஆணைக்குழு இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆணைக்குழு நேற்று நடத்திய கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. 

நீதிமன்றங்களில் கூடவுள்ள மக்கள் தொகையை குறைக்கும் நோக்கத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் மேற்படி ஒத்தி வைக்கப்படும் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எனினும் அவசர மற்றும் முக்கிய வழக்குகளை மட்டும் விசாரணைக்கு எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் தமது கட்சிக்காரர்களின் வருகை முக்கியமாக தேவைப்படும் பட்சத்தில் மட்டும் அவர்களை நீதிமன்றங்களுக்கு வருமாறு சட்டத்தரணிகள் கேட்டுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடி நீதிமன்றங்களின் சிறிய சிறை அறைகளில் தேவையற்ற நெரிசல் இல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிச்சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad