பிலிப்பைன்ஸ் தலைநகரில் தீப்பிடித்து எரிந்தது விமானம் - மருத்துவ பணியாளர்கள் உட்பட 8 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Sunday, March 29, 2020

பிலிப்பைன்ஸ் தலைநகரில் தீப்பிடித்து எரிந்தது விமானம் - மருத்துவ பணியாளர்கள் உட்பட 8 பேர் பலி

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவின் விமான நிலையத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். 

ஜப்பானில் சிக்குண்டுள்ள பிலிப்பைன்சை சேர்ந்த நோயாளியை அங்கிருந்து அழைத்து வருவதற்காக புறப்படவிருந்த விமானம் புறப்பட ஆரம்பித்த சில நிமிடங்களில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. 

மனிலாவின் நினோ அகியுனோ விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு விமானம் தயாராகயிருந்த வேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

ஒடுபாதைக்கு செல்வதற்கு முன்னர் விமானம் தீப்பிடித்துள்ளது. ஜப்பானிற்கு மருந்துகள் மருத்துவ உபகரணங்களுடன் புறப்பட்ட விமானமே விபத்திற்குள்ளாகியுள்ளது. 
இந்த விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டு இருந்த போது தீப்பிடித்து வெடித்தது. இதையெடுத்து தீயணைப்புப் படையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விமானத்தில் மூன்று மருத்துவர்கள் மற்றும் ஒரு நோயாளி உட்பட எட்டு பேர் கொண்ட குழுவினர் இருந்துள்ளனர். விமானத்தில் இருந்த நோயாளி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாரா..? என்பது குறித்த தகவலும் வெளியாகவில்லை.

RP-C5880 என்ற எண்ணைக் கொண்ட ஒரு ஜெட் விமானமே இன்று இரவு 8 மணியளவில் மருத்துவ சிகிக்சைக்காக  புறப்பட்ட விமானமே விபத்திற்குள்ளாகியுள்ளது. 

No comments:

Post a Comment