இன்று முதல் 88 புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்! - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 17, 2020

இன்று முதல் 88 புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்!

இன்று (17) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை 88 புகையிரத சேவைகளை தற்காலிகமாக இரத்துச் செய்வதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

புகையிரத பொது முகாமையாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய இன்று (17) முதல் இடைநிறுத்தப்படுவதாக, புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

அதற்கமைய பிரதான பாதை, கரையோரம், களனிவெளி, வடக்கு மற்றும் சிலாபம் மார்க்கங்கள் உள்ளிட்ட 88 புகையிரத சேவைகள் இவ்வாறு இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான மார்க்கத்திலான 34 புகையிரத சேவைகளும், சிலாபம் மார்க்கத்திலான 14 புகையிரத சேவைகளும், கரையோர மார்க்கத்திலான 22 புகையிரத சேவைகளும் களனிவெளி மார்க்கத்திலான 12 புகையிரத சேவைகளும், தலைமன்னார் மார்க்கத்திலான 02 புகையிரத சேவைகளும், வடக்கு மார்க்கத்திலான 04 புகையிரத சேவைகள் உள்ளிட்ட 88 சேவைகள் இவ்வாறு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு ரயில் பஸ் சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புகையிரத சேவைகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் அரசாங்கத்தின் 03 நாள் பொது விடுமுறை அறிவிப்பை தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad