இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, March 14, 2020

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் இன்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக சகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 05 பேர் நேற்று (13) பதிவாகினர். இவர்களுடன் கொரோனா தெற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 07 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் ஒருவர் இத்தாலியில் இருந்து வந்த பின்னர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையதிற்குள் உள்வாங்கப்பட்டவர். 44 வயதான இவர் தற்பொழுது பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மற்றைய நபரும் இத்தாலியில் இருந்து வந்துள்ளார். 43 வயதான இவர் நாத்தாண்டியை சேர்ந்தவர். இவர் தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்திற்குள் உள்வாங்கப்பட்டவர் அல்ல என்பதுடன், இவர் குருநாகல் வைத்தியசாவையில் சகிச்சை பெற்று வருகின்றார். இவர்களை நாம் கவனத்தில் கொள்ளும் போது இவர்களுள் 6 பேர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களாவர்.

இவர்களுள் நோய் தொற்றுக்கு உள்ளான ஒருவர் செங்கன் நாட்டில் இருந்து வந்தவராவார். இவர் ஜேர்மன், இத்தாலி போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார். இந்த விடயங்களில் மற்றுமொரு முக்கிய விடயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களினாலேயே இந்த நோய் உள்நாட்டுக்குள் பரவ ஆரம்பித்துள்ளது. இதனையே நாம் எதிர்பார்த்தோன் அதே இடம்பெற்றுள்ளது. இதனாலேயே இத்தாலி, தென் கொரியா, ஈரான் போன்ற நாடுகளில் இருந்து வருவோருக்காக இந்த தனிமைப்படுத்தலை அறிமுகப்படுத்தினோம்.

நாம் மேற்கொண்ட தீர்மானம் சரியானது என்பது இதன் மூலம் தெளிவாகின்றது என்றும் அவர் தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள முக்கிய 17 வைத்தியசாலைகளில் 103 கொரோனா தொற்று சந்தேகத்துக்கு இடமானவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த அவர் ஈரான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அடங்கலாக பல நாடுகளில் இருந்து வரும் விமானங்களை தடை செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்தது.

நோய் தொற்றுக்கு உள்ளான இத்தாலியில் இருந்து வந்த இருவர் மிலோன் விமான நிலையத்தில் இருந்து இலங்கை வர முடியாமல் அந்த நாட்டில் 800 மைல்களுக்கு அப்பால் சென்று விமானம் ஏறி இங்கு வந்துள்ளனர்.

இவர்கள் பரசிற்றமோல் குழிசைகளை பயன்படுத்தியுள்ளனர்; இவர்கள் தனிமைப்படுத்தும் முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்ட 16 பேருடன் இருந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த 16 பேரையும் இராணுவத்தினர் தனிமைப்படுத்தியுள்ளனர் என்றும் டொக்டர் அனில் ஜாசிங்க இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற கொவிட் - 19 செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment