வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமிற்கு மேலும் 70 பேர் அழைத்து வரப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Monday, March 16, 2020

வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமிற்கு மேலும் 70 பேர் அழைத்து வரப்பட்டனர்

கொரோனா தொற்று மருத்துவ பரிசோதனைக்காக மேலும் 70 பேர் வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமிற்கு இன்று அழைத்து வரப்பட்டனர்.

கொரோனா தொற்று மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 213 பேர் கடந்த (13.06.2020) அன்று மாலை வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டு, பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று (16.03.2020) மதியம் 3.30 மணி அளவில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 70 பேர் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.

பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் 2 பேரூந்துகளில் கொரோனா தொற்று ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கைக்கு 70 பேர் வவுனியா, பம்மைமடு பகுதியில் அமைந்துள்ள 23 வது பற்றாலியன் இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள தொற்று நோய் ஆய்வு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த குறித்த நபர்களை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 14 நாட்களுக்கு சிகிச்சை முன்னெடுக்கப்படவுள்ளது.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment