கொழும்பு நகரிலுள்ள அதிக எண்ணிக்கைகளைக் கொண்ட குடியிருப்பு உரிமையாளர்களுக்கு நாவல கொழம்பகே மாவத்தையில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.
இதற்கமைய 624 வீடமைப்பு அலகுகளைக் கொண்ட மாடி வீடமைப்பு செயற்றிட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் பணிப்புரைக்கமைய நேற்று (10) ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் பிரியத் பந்து விக்கிரமவின் தலைமையின் கீழ் இந்த வீடமைப்பு செயற்றிட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆசியாவின் உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கி கடனுதவியின் கீழ் நகர புத்துயிரளிப்பு செயற்றிட்டத்தினை முன்கொண்டு செயற்படும் செயற்றிட்டமாக இது ஆரம்பிக்கப்பட்டது.
அதற்மைய கொழும்பு நகரினை அபிவிருத்தி செய்யும் அடிப்படை வேலைத்திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இது மேற்கொள்ளப்படுகிறது.
இந்த செயற்றிட்டத்தின் ஆரம்ப கட்டமாக கொழும்பு நகரின் அதிநெரிசல் மிக்க குடியிருப்புக்கள் மீளமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.
இது அம்மக்களுக்கு முறையான மாடி வீட்டு குடியிருப்புகளில் வீடுகள் வழங்கப்பட்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்கள் குடியிருந்த காணிகள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக உபயோகப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் பாரிய செயற்றிட்டமாகும்.
அந்த செயற்றிட்டம் கட்டம் 1 மற்றும் கட்டம் 2 என மேற்கொள்ளப்படும். இதற்கமைய ஏற்கனவே 12,855 வீடுகள் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தற்போது 3 ஆம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஆரம்பக் கட்டமாக 5500 வீடுகள் நிர்மாணிப்பதற்காக செயற்றிட்ட பிரேரணை முன்வைக்கப்பட்டதன் பின்பு அதனை செயற்படுத்துவதற்காக ஆசியாவின் உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கி இணங்கியுள்ளது.
நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் நகர புத்துயிரளிப்பு செயற்றிட்டத்தினை முன்கொண்டு தனியொரு செயற்றிட்ட முகாமைத்துவ அலகாக நகர புத்துயிரளிப்பு செயற்றிட்டம் தோன்றியுள்ளது.
இந்த செயற்றிட்டத்தின் கீழ் 5500 வீடமைப்பு அலகுகள் நிர்மாணிப்பதற்காக சம்பந்தப்பட்ட காணியை இனங்கண்ட பின் அதற்கான அனுமதியை பெற்றுக் கொண்டு அதனை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளன.
அதன் இணையான செயற்றிட்டமாக 624 வீடமைப்பு அலகினைக் கொண்டதும் 3127 மில்லியன் ரூபா முதலீட்டினைக் கொண்டமான கொழம்பகே மாவத்தை வீடமைப்பு செயற்றிட்டமானது அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை, வெளிநாட்டு வள திணைக்களம் மற்றும் ஆசியாவின் உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கி ஆகியவற்றின் மேற்பார்வையினால் நடைபெறும்.
கொழும்பில் மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த அபிவிருத்தியானது பகுதி நகரமயமாக்கல், கிராம மட்டங்கள் ஆகியனவற்றிற்கு கொண்டு செல்வதற்கு அரசு செயற்படுவதால், அதன் ஒரு கட்டமாக நகர புத்துயிரளிப்பு செயற்றிட்டம் செயற்படுகின்றதென பேராசிரியர் பிரியத் பந்த விக்கிரம குறிப்பிட்டார்.
தினகரன்
No comments:
Post a Comment