நேற்றையதினம் (08) அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பொலிஸ் தலைமையகத்தினால் விசேட விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, பொது போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தும்போது, பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகம் தொடர்பில் பொதுமக்களை தெளிவூட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்களுக்கு 5 வருடங்கள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும்' எனும் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களும் இதன்போது பஸ்களில் ஓட்டப்பட்டன.
1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனைக் கோவைச் சட்டத்தின் 345 ஆம் பிரிவிற்கு அமைய, இத்தண்டனை வலிதாவதோடு, பிடியாணையின்றி கைது செய்யப்படக் கூடிய குற்றமாக இது கருதப்படுகின்றது.
புறக்கோட்டை பெஸ்டியன் வீதியிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்ற இவ்விழிப்புணர்வு நடவடிக்கையின்போது, இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்களில், இது தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை பொலிஸார் ஒட்டினர்.
பொலிஸ், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினால் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பெண்கள், சிறுவர்கள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் அறிவிக்க 011 2444444 தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment