புத்தளம், சிலாபம், நீர்கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (18) பிற்பகல் 4.30 மணியிலிருந்து மீள அறிவிக்கும் வரை இவ்வூரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் சட்ட ஒழுங்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த வகையில், புத்தளத்தின் 11 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும், சிலாபத்தின் 7 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலும் நீர்கொழும்பின் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிலும் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, புத்தளத்தில்
புத்தளம்
ஆனமடு
கற்பிட்டி
கருவலகஸ்வெவ
முந்தளம்
நவகத்தேகம
பல்லம
வனாத்தவில்லு
உடப்பு
நுரைச்சோலை
சாலியவெவ
சிலாபத்தில்
சிலாபம்
தங்கொட்டுவை
கொஸ்வத்தை
மாதம்பை
மாரவில
வென்னப்புவ
ஆரச்சிக்கட்டு
நீர்கொழும்பில்
கொச்சிக்கடை
No comments:
Post a Comment