முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிணை முறி மோசடி தொடர்பில் பிடியாணை வழங்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை இன்று (13) பிற்பகல் 4.00 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்துள்ள ரிட் மனு இன்று (13) மூன்றாவது நாளாக ஆராயப்பட்ட போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த மனு மேன்முறையீட்டு நீதிபதிகளான மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா, ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது
அத்துடன், இவ்வாறு ஆஜராகும் சந்தேகநபர்களுக்கு எதிராக எவ்வித உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இன்று (13) பி.ப. 4.00 மணிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகாத சந்தேகநபர்கள் தொடர்பில், தற்போது வழங்கப்பட்டுள்ள பிடியாணைக்கு அமைய சட்ட மா அதிபரால் நடவடிக்கை எடுக்க முடியும் என அவ்வுத்தரவில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து குறித்த ரிட் மனு தொடர்பிலான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment