கொரோனா வைரஸ் தொற்றால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஈரானில் மதுவால் கொரோனா வைரஸ் சாகும் என்ற வதந்தியை நம்பி ‘மெத்தனால்’ குடித்த 27 பேர் உயிரிழந்தனர்.
ஈரானில் வாழும் இஸ்லாமிய மக்கள் மது அருந்த பரிபூரண தடை விதிக்கட்டுள்ளது. எனினும், பிறமதத்தினருக்கு மட்டும் அனுமதி உண்டு.
கொரோனா வைரஸ் தொற்றால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஈரானில் இந்நோயின் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 237 ஐ கடந்துள்ளது.
இதற்கிடையில், மது அருந்தினால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உயிர் தப்புவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற வதந்தியை நம்பி ‘மெத்தனால்’ என்னும் எரிச்சாரயம் கலந்த மதுவை குடித்த ஈரான் நாட்டினர் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 20 பேர் நாட்டின் வடமேற்கில் உள்ள குசேஸ்தான் மாகாணத்தையும் 7 பேர் அல்போர்ஸ் மாகாணத்தையும் சேர்ந்தவர்கள் என ஈரான் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment