24 மணி நேரத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 809 பேர் கைது - 166 வாகனங்கள் கைப்பற்றல் - News View

About Us

About Us

Breaking

Monday, March 30, 2020

24 மணி நேரத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 809 பேர் கைது - 166 வாகனங்கள் கைப்பற்றல்

நேற்று (29) காலை 6.00 மணி முதல் இன்று (30) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 809 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு இக்காலப்பகுதியில் 166 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய கடந்த 20 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 6,850 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 1,643 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 20 ஆம் திகதி மாலை 6.00 மணியிலிருந்து நாட்டில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment