கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இத்தாலியில் மாத்திரம் கடந்த 24 மணித்தியாலத்தில் 627 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, உலகளாவிய ரீதியில் சுமார் 11,397 பேர் உயிரிழந்துள்ளதுடன், 275,796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை இத்தாலியில் 4,032 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் தொகை இத்தாலியிலேயே அதிகமாக உள்ளது.
ஆனால் இந்த கொரோனா வைரஸின் ஆரம்பமாக காணப்படும் சீனாவில் இதுவரை 3,255 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் கொரோனாவினால் இதுவரை 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment