உலகம் முழுவதும் 21 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 25, 2020

உலகம் முழுவதும் 21 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 4 லட்சத்து 61 ஆயிரத்து 9 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 20 ஆயிரத்து 846 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 3 லட்சத்து 26 ஆயிரத்து 364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 799 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வருமாறு

இத்தாலி - 7,503
ஸ்பெயின் - 3,445
சீனா - 3,281
அமெரிக்கா - 889
ஈரான் - 2,077
பிரான்ஸ் - 1,331
இங்கிலாந்து - 435
நெதர்லாந்து - 356
ஜெர்மனி - 206
பெல்ஜியம் - 178
சுவிஸ்சர்லாந்து - 153
தென்கொரியா - 126
இந்தோனேசியா - 58
பிரேசில் - 50
ஜப்பான் - 45
துருக்கி - 44 
ஸ்வீடன் - 44
பொர்ச்சீகல் - 43
பிலிப்பைன்ஸ் - 38
டென்மார்க் - 34
அவுஸ்ரேலியா - 30
கனடா - 30
ஈராக் - 29
ஈக்வடார் - 28
கிரீஸ் - 22
எகிப்து - 21

No comments:

Post a Comment