ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலை சம்பவம் தொடர்பில் 15 மாணவர்களுக்கு வகுப்புத் தடை - News View

Breaking

Post Top Ad

Friday, March 13, 2020

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலை சம்பவம் தொடர்பில் 15 மாணவர்களுக்கு வகுப்புத் தடை

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ள பகிடிவதை சம்பவம் தொடர்பில் 15 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்க அப்பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.

இவ்வாறு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 06 மாணவர்களும் அடங்குகின்றனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற விருந்தோம்பல் நிகழ்வில் மாணவர் ஒருவர் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முகாமைத்துவ பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களினால் கடந்த வெள்ளிக்கிழமை (06) பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வின்போது, உயரமான இடத்திலிருந்து வீழ்ந்த டயர் ஒன்று, பசிந்து எனும் மாணவரின் தலையில் வீழ்ந்துள்ளது.

இதனையடுத்து குறித்த மாணவன், மிக மோசமான நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். குறித்த டயர் உயரமான இடத்திலிருந்து தள்ளி விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad